சப்ஜா விதையில் இருக்கும் நன்மைகள் தெரியுமா !

திருநீற்றுப்பச்சிலை செடி நாம் அனைவரும் அறிந்ததே இது துளசி வகையை சார்ந்தது.இதில் இருந்து கிடைக்கும் விதை தான் சப்ஜா விதைகள்.இதை நாம் பலூடா மற்றும் சர்பத்துகளில் அருந்திருப்போம்.இதில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.

முதலில் சப்ஜா விதைகள் உடலில் இருக்கும் சூட்டை குறைக்கும்.இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இந்த விதைகள் நீரை உறிஞ்சிக்கொள்ளும்.

இதில் ஒமேகா-3 அமிலம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இதில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் உங்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் போக்கும். மேலும் இது செரிமான பிரச்சனை, குடலில் புண் போன்ற அனைத்திற்கும் தீர்வாக சப்ஜா விதைகள் இருக்கிறது.

இந்த விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவது நல்லது. குறைந்தது 6 மணி நேரம் வரை இந்த விதை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு ஊறிய விதைகளை தண்ணீரில் போட்டு குடிக்கலாம் இல்லை என்றால் ஜூஸ் அதனுடன் சேர்த்து கொண்டு குடிக்கலாம்.