சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்க படவேண்டும் !

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதந்தோறும் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.கடந்த 3 மாதங்களாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த சிலிண்டரின் விலை தொடக்கத்தில் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.660 ஆக அதிகரித்தது.மேலும் 2வது முறையாக சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகரித்து 710 ரூபாய்க்கு விற்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.மேலும் தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘ஏழை நடுத்தர வகுப்பினர் உள்பட அனைத்து தரப்பு மக்களின் அத்தியாவசியத் தேவையாக உள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் பா.ஜ.க ஆட்சியில் தாறுமாறாக விலையேற்றம் கண்டுள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் இந்த கொரோனா காலத்தில் மீண்டும் மீண்டும் உயர்த்தப்பட்டுவருகிறது.

2020 மே மாதம் 599 ரூபாய் இருந்த என உயர்ந்த சிலிண்டர் விலை ஜூன், ஜூலை மாதத்திலும் உயர்த்தப்பட்டது. இந்தநிலையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் மீண்டும் 50 ரூபாய் விலையேற்றம் செய்யப்பட்டு 660 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 15 நாள்களுக்குள்ளாக மீண்டும் 50 ரூபாய் விலையேற்றம் செய்யப்பட்டு 710 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15 நாள்கள் இடைவெளியில் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகரித்திருப்பது பொதுமக்களை கடுமையாகப் பாதித்துள்ளது.

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில், ஆட்சியாளர்களோ உதவிக்கரம் நீட்டமாட்டோம் என்கிறார்கள். டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையில் சிலிண்டரை வழங்குக. இல்லையெனில், தாய்மார்களின் கோபத்திலிருந்து ஆட்சியாளர்கள் தப்ப முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.