மாதங்களில் நான் மார்கழி -கண்ணனுக்கு பிடித்த மாதம்!

மாதங்களில் உயர்ந்த மாதம் மார்கழி. இந்த மாதத்தில் எவ்வளவோ சிறப்புகள் உண்டு. பொதுவாக இந்த மாதத்தில் விதை விதைக்கக் கூடாது என்பார்கள். ஏனெனில் இது விதை விதைப்பதற்கான காலம் அல்ல. விதை வளர்வதற்கான காலம்.ஆடி மாதம் போல, மார்கழி மாதம் இறைவனுக்குரிய மாதம்.

மார்கழி மாதத்தில் அதிகாலை எழுவது மிகவும் நல்லது.பிரம்ம முகூர்த்தமான 4.30 மணிக்கு எழுந்து நீராட வேண்டும்.செல்வந்தர் ஆக வேண்டும் என்றால் இந்த நேரத்தில் எழுந்து இறைவனை தரிசனம் செய்ய வேண்டும்.ந்த நேரத்தில் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய அதீத ஆக்ஸிஜன் நம் உடலுக்கு ஆண்டு முழுவதும் தேவையான நலனை தர வல்லது.

மார்கழி மாதத்தில் தினமும் காலை நீராடி, வீட்டில் இறைவனை வணங்கி விட்டு, அருக்கில் உள்ள திருமால் அல்லது சிவன் கோயிலுக்குச் சென்று வணங்கி வருவது சிறப்பு வாய்ந்தது.