முதலமைச்சர் பழனிசாமியை சாடியுள்ள தி. மு. க. தலைவர் ஸ்டாலின்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமியின் சவாலை ஏற்றுள்ளார்.மேலும் அவர்
சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த ஊழல் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்க நடவடிக்கை எடுத்து விட்டு, ஊழல் புகார்கள் குறித்து விவாதிக்க வாருங்கள் என்றும், பழனிசாமியை சாடியுள்ளார்.

மேலும் அவர் வெளிட்ட அறிக்கையில், இந்தியாவிலேயே ஊழலுக்காக சிறைக்கு போன முதலமைச்சரை கொண்ட கட்சி, என்றும் மாறா ஊழல் கறை படிந்த கட்சி அதிமுக தான். அந்த கட்சியின் முதலமைச்சரான பழனிசாமி, அரசு கஜானாவை வைத்து போலி, பொய், புளுகு பிரச்சாரம் செய்ய அவருக்கு இருப்பது இன்னும் நான்கு மாதம்தான். அதனால் தான், என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார்.

தனது துறையிலேயே சம்பந்திக்கு ரூ.6,000 கோடி ரூபாய் டெண்டர் கொடுத்ததுடன், ’என் உறவினர் டெண்டர் எடுப்பதில் என்ன தவறு?’ என்று உயர் நீதிமன்றத்திலேயே வாதிட்டார்.

திமுகவினர் மீது நில அபகரிப்புப் புகார் என்று ஒரு பொய்யை திரும்பத் திரும்பப் பேசி வருகிறார் பழனிசாமி. இந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சிதானே இருந்தது? எத்தனை திமுகவினர் மீது நில அபகரிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா? என்று முதலமைச்சர் நேற்று சவால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார்.

இந்த நான்காண்டு கால ஆட்சியில் எப்படிக் கொள்ளையடித்து சுரண்டி உள்ளீர்கள், என்ன கமிஷன் வாங்கி, கலெக்‌ஷன், கரெப்ஷன் செய்துள்ளீர்கள் என்பதை கிழித்து தோரணமாக தொங்க விடுகிறேன். நான் ரெடி. முதலமைச்சர் மிஸ்டர் பழனிசாமி நீங்கள் ரெடியா?” என்று கேட்டுள்ளார்