ஸ்புட்னிக் தடுப்பூசி 90 சதவீதம் தடுப்பாற்றல் உடையது !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் இது பரவாமல் தடுக்க மாநில மற்றும் ஒன்றிய அரசு தனி தனியாக ஊரடங்கை அறிவித்தது.

கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின் கோவில்ஷீல்டு ஸ்புட்னிக் வ தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. தடுப்பூசி ஒன்றே கொரோனாவில் இருந்து தடுக்கும் வழி என்று கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் வகை தற்போது கொரோனா டெல்டா பிளஸ் என்று உருமாறியுள்ளது.

டெல்டா டெல்டா பிளஸ் எனத் திரிந்து உருமாறி அச்சுறுத்தி வரும் நிலையில் அத்தனை வகையான டெல்டா திரிபுகளுக்கு எதிராகவும் ஸ்புட்னிக் வ தடுப்பூசி 90% திறம்பட செயல்படுவதாக ரஷ்யா காமாலேயா இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது.