இந்தியாவில் வெளிநாட்டு விமான சேவைக்கான தடை நீட்டிப்பு !

கொரோனா தொற்று இந்தியாவில் தற்போது குறையத்தொடங்கியுள்ளது.மாநில மற்றும் ஒன்றிய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட வெளிநாட்டு விமான சேவைக்கான தடையை ஜூலை 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளுக்குச் செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் விமான சேவைக்கான தடை வரும் ஜூலை 31 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் சிலவற்றில் இரண்டு மூன்று என கொரோனா பரவல் பரவி கொண்டிருக்கிறது.மேலும் சில கார்கோ விமானங்களும், பப்புள் ஜோனில் உள்ள நாடுகளுக்கு இடையே சில குறிப்பிட்ட பயணிகள் விமானமும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.