உங்கள் ஸ்மார்ட்போன் திரை கொண்டு கொரோனா தொற்று அறியும் முறை !

கொரோனா தொற்று தாக்க ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.தற்போது கொரோனா தொற்றின் வகை கொண்டு இரண்டு,மூன்று என அலைகள் உலகில் உருவாகிவருகிறது.

ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்ய செய்ய மூக்கு அல்லது தொண்டை பகுதிகளில் பரிசோதனை செய்கிறார்கள்.ஆனால் தற்போது ஒருவர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் திரை கொண்டு கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

பொதுவாக பி.சி.ஆர் சோதனையுடன் ஒப்பிடும்போது, ​​தொலைபேசி திரை சோதனை முறை செலவுகள் குறைவாக உள்ளது, அதேபோல் துல்லியமானது என்று விஞ்ஞானிகள் eLife இதழில் தெரிவித்துள்ளனர்.

இது எப்படி சாத்தியம் என்றால் மக்கள் இருமும்போது, ​​தும்மும்போது அல்லது பேசும்போது, ​​அவர்களைச் சுற்றியுள்ள மேற்பரப்பில் சில நீர்த்துளிகளை வெளியேற்றுகிறார்கள்.

இந்த நீர்த்துளிகள் கொண்டு ஆராய்ந்தால் வைரஸ் இருப்பதாய் உறுதிசெய்துவிடமுடியும் என்று கூறுகிறார்கள்.