அதிகரித்து வரும் மாறுபட்ட வகை கொரோனா தொற்று !

coronavirus
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில்,நாட்டில் 35 மாநிலங்களில் 174 மாவட்டங்களில் மாறுபட்ட வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆரம்ப கவனம், நாட்டில் உலகளாவிய மாறுபாடுகளின் பரவலை கட்டுப்படுத்துவதில் இருந்தது – ஆல்பா (பி .1.1.7), பீட்டா (பி .1.351) மற்றும் காமா (பி .1) வகை கொரோனாக்கள் அதிகம் பரவும் தன்மையுடையதாக இருந்தது. இந்த மாறுபட்ட வகை கரோனாக்களின் நுழைவை, இன்சாகாக் தீவிரமாக கண்காணித்தது.

நாட்டில் 35 மாநிலங்களில், 174 மாவட்டங்களில், மாறுபட்ட வகை கரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன.

அதிக எண்ணிக்கையிலான மாறுபாடுகள், மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், தெலங்கானா, மேற்குவங்கம் மற்றும் குஜராத்தில் கண்டறியப்பட்டன. இந்த மாறுபட்ட கரோனா மாதிரிகள், ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வகையை சேர்ந்தது.