புதிய முதல்வர் நியமனம் குறித்து இன்று மாலை தெரிந்து விடும்- எடியூரப்பா

கர்நாடகாவில் புதிய முதல்வர் நியமனம் குறித்து இன்று மாலை தெரிந்து விடும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார் அம்மாநில முதல்வர் எடியூரப்பா.

பின்னர், எடியூரப்பா (வயது 78) தலைமையிலான புதிய பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்தது. நாளையுடன் (ஜூலை 26) அவர் முதல்வராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவாக உள்ளது. இரண்டு ஆண்டுகாலமாக சுமூகமாக ஆட்சி செய்து வந்த எடியூரப்பாவிற்கு சமீபத்தில் சக எம்.எல்.ஏக்களால் குடைச்சல் எழுந்தது. எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கலகக் குரல்கள் எழுந்தன.

சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் எடியூரப்பாவை பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய எடியூரப்பாவிடம், அடுத்த கர்நாடக முதல்வர் ஒரு தலித்தாக இருக்கலாமா என கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், “இன்று மாலை பாஜக தலைமையிடமிருந்து முக்கியத் தகவல் வந்துவிடும், அதன் பிறகு தான் நான் பதவியில் இருப்பேனே இல்லையா என்பதை உங்களிடம் தெரிவிப்பேன். எப்போது தகவல் கிடைத்தாலும், கட்சியின் தலைமை என்ன செய்ய சொன்னாலும் நான் தயார் தான் என எடியூரப்பா கூறினார்.

முதல்வராக இரண்டு ஆண்டுகளை நாளையுடன் அவர் நிறைவு செய்த பின்னர், எடியூரப்பா பதவி விலகல் இருக்கும் என்றே தகவல் பரவி வருகிறது.