புதுவையில் இன்று 104 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு !

கொரோனா தொற்று கடந்த வருடம் முதல் இன்று வரை உலக மக்களை தன்வசமாக்கியுள்ளது.மேலும் கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியாவில் மாநில மற்றும் ஒன்றிய அரசு தனி தனியே ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.இந்நிலையில்,புதுச்சேரியில் புதிதாக 104 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் கூறுவது,புதுச்சேரி மாநிலத்தில் 5,950 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 82, காரைக்கால் – 8, ஏனாம் – 2, மாஹே – 12 பேர் என மொத்தம் 104 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 331 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 620 ஆக உள்ளது.

மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 6 லட்சத்து 76 ஆயிரத்து 356 பேருக்கு 2வது டோஸ் உட்பட தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.