ஊட்டி- மேட்டுப்பாளையம் வரை சிறப்பு ரயில் சேவை !

கோடைக்காலம் தொடங்கியதை ஒட்டி தென்னக ரெயில்வே சேலம் கோட்ட மேலாளர் அலுவலக செய்திக் குறிப்பில், ஊட்டி கோடை சீசனையொட்டி ஏப்ரல் 3ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.

இது மேட்டுப்பாளையத்தில் இருந்து சனிக்கிழமை காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு ஊட்டி வந்தடையும். மறு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும்.

மேலும் முதல் வகுப்பில் 72 இருக்கைகளும், 2ம் வகுப்பில் 100 இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கான கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.