சாத்தான் எனும் தடுப்பூசி-உண்மையை உளறி நீதிபதி!

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அனைத்து கண்டங்களிலும் பரவி உலகளவில் 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகம் முழுவதும் கொரோனா ஆட்டிப்படைத்து வரும் நிலையில், எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என பல நாடுகளில் மக்கள் ஏங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு நாட்டின் தலைமை நீதிபதியே தடுப்பூசிக்கு எதிராக பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அந்த அரசு எடுத்து வருகிறது.இந்த நிலையில் அந்த நாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தடுப்பூசிக்கு எதிராக கருத்து கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜோகன்னஸ்பர்கில் உள்ள ஒரு தேவாலயத்தில் தலைமை நீதிபதி மோகோயங் மோகோயங் கூறியதாவது:- மக்களுக்கு தடுப்பூசி ஏன் வேண்டும்? தடுப்பூசி எப்போதும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. தடுப்பூசி போடும்படி மக்களை நீங்கள் கட்டாயபடுத்த முடியாது. தடுப்பூசிகளை நான் கடவுளாக பார்க்கவில்லை. அது ஒரு சாத்தான் போன்றது. தடுப்பூசி போட்டால் மக்களின் மரபணுக்கள் அழிந்து விடும். எனவே இந்த தடுப்பூசிகளை கடவுள் அழிக்க வேண்டும் என்று மோகோயங் மோகோயங் கூறினார்.