பாஜக கூட்டணியில் ரஜினி இணைவது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்

ரஜினியை இயக்குவது பாஜக தான், அவரைக் கட்சி ஆரம்பிக்கச் சொல்லி பாஜகதான் நெருக்கடி கொடுத்தது எனப் பல விமர்சனங்கள் வெளியானது.

இந்நிலையில், பாஜக தமிழகத் தலைவர் முருகனிடம் இன்று செய்தியாளர்கள், ரஜினி கட்சி பாஜக கூட்டணியில் இணையுமா எனக் கேள்வி எழுப்பினர்.இதற்குப் பதிலளித்த அவர், பாஜக கூட்டணியில் ரஜினியின் புதிய கட்சி இணைவது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் அரசியல் வருகையால் பாஜகவுக்குஎந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்துள்ளார்.