வளர்ந்த நாடுகள் கரோனா தடுப்பூசியை தேவைக்கு அதிகமாக வாங்குகின்றனர் – தென் ஆப்பிரிக்கா அதிபர் !

தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா, பணக்கார நாடுகள் கரோனா தடுப்பூசிகளை பதுக்கி வைத்துக் கொண்டு ஏழை நாடுகளுக்கு துரோகம் செய்கின்றன என்று பரபரப்புக் குற்றச்சாட்டை தேவோஸில் நடைபெற்ற மாநாட்டில் கூறியுள்ளார்.

மேலும் பணக்கார நாடுகள் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் நாடுகள், தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெரிய அளவில் தடுப்பூசிகளை வாங்கி பதுக்கி வைக்கின்றனர். சில பணக்கார நாடுகள் அவர்கள் மக்கள் தொகையை விடவும் 4 மடங்கு அதிகமாக வாங்கி பதுக்குகின்றனர்.

பிறநாடுகளுக்கு பயன்படும் வகையில் தடுப்பூசிகளை தேவையான அளவு வாங்கி கொள்ள வேண்டும். அப்போதுதான் பிற ஏழை நாடுகள் பயனடைய முடியும்.கரோனா என்ற தீமைக்கு எதிரான போரில் பயனடைவது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.