சவுரவ் கங்குலி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான சௌரவ் கங்குலி லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அவருக்கு மயக்கமும், நெஞ்சு வலியும் ஏற்பட்டு, உடனடியாக வுட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

அவருக்கு லேசான கார்டியாக் அரஸ்ட் என்று சொல்லப்படும் இதய நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உடற்பயிற்சியின்போது நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.