விஜய் வசந்த் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார் !

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் இன்று நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக மறைந்த மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக ரூபி மனோகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்களாக கோபண்ணா உள்ளிட்ட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூத்தத் தலைவர் தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரின் மகன்களுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.தங்கபாலு மகன் கார்த்தி, திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மறைந்த மக்களவை உறுப்பினர் வசந்த குமார் மகன் விஜய் வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தேர்தலுக்காக காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் வாக்குறுதி தயாரிக்கும் குழு தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.