சூரியனார் கோவில் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் !

உலகில் உயிர்கள் உருவாக பிரதானமாக இருப்பது சூரிய ஒளி.சூரிய ஒளி இல்லை என்றல் இவ்வுலகில் உயிரினம் புல் பூண்டு எதுவும் இருக்காது.அப்படி பட்ட சூரியனை நாம் இறைவனாக கோவில் கட்டி பூஜை செய்து வணங்கி வருகிறோம்.தமிழ்நாட்டில் நவக்கிரகங்களுக்கு என்று 9 ஆலயங்கள் உள்ளன. அங்கு மக்கள் சென்று வணங்குகின்றனர். ஆயினும் அத்தனை தலங்களையும் வழிபட்ட பயன் சூரியனார் கோவிலுக்கு சென்று-வணங்கினாலே கிடைக்கிறது.அத்தகைய பெருமை வாய்ந்த கோவில் தான் நம் சூரியன் வீற்றிருக்கும் சூரியனார் கோவில்.

சூரிய பகவான் நின்ற கோலத்தில் இரண்டு கரங்களுடன் திகழ்கிறார் அவற்றில் தாமரை மலரை ஏந்தி நிற்கிறார். உஷா, சாயா என்ற இரு தேவியார் சூரிய பகவானின் இரு பக்கங்களிலும் நிற்கின்றனர்.புத்திர தோஷம், உத்தியோகப் பிரதிபந்த தோஷம், சூரிய புத்தி, சூரிய திசை உள்ளவர்கள் இத் தலத்துக்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும். மேலும் ஒற்றை தலை வலியால் பாதிப்புக்கு உள்ளவர்கள் இங்கு வந்து சூரியனை தரிசித்து சென்றால் உடல் சூட்டால் உண்டாகும் தலை வலி குறையும் என்கிறார்கள்.

அமைவிடம்

தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணம்-பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது.