ரசிகர்களின் விருப்ப படமாக சூரரைப் போற்று தேர்வு..!!

ராம் சினிமாஸ் சார்பாக ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 97.4 ஆயிரம் வாக்குகளுடன் ‘சூரரைப் போற்று’ முதல் இடத்தை பெற்றிருக்கிறது.

ஏற்கெனவே இந்த போட்டிகளில் பங்கேற்ற கில்லி, அசுரன் ஆகிய படங்களை விட ‘சூரரைப் போற்று’ அதிக சதவீதத்தில் வாக்குகளை பெற்றிருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சம். வாக்கெடுப்பு, அதன் முடிவுகள் அனைத்தையும் அறிவித்துள்ள ராம் சினிமாஸ், போட்டியில் பங்கேற்ற அனைத்து படங்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது.