‘வலிமை’ படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ள தேதி உங்களுக்கு தெரியுமா?

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு பிறகு மீண்டும் ஹெச்.வினோத் இயக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

இந்நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி குறித்த மற்றொரு பரபரப்பு தகவல் இப்போது வெளியாகியுள்ளது. தல அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி ‘வலிமை’ படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

அன்றைய தினம் உழைப்பாளர் தினம் என்பது இதன் கூடுதல் சிறப்பு. போனி கபூர் தயாரிக்கும் ‘வலிமை’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் இதன் பின்னணி இசை பணியின்போது யுவன் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.