உச்சம் நோக்கி பயணிக்கும் இந்திய பங்குச்சந்தைகள்

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று சுமார் 403.29 புள்ளிகள் உயர்ந்து 46,666.46 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 114.85 புள்ளிகள் உயர்ந்து 13,682.70 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதிகபட்சமாக ஹிண்டால்கோ நிறுவனத்தின் பங்குகள் 3 விழுக்காடு உயர்ந்து வர்த்தகமானது. அதேபோல பாரதி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி., ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.