நடிகர் சோனு சூட்டுக்கு கரோனா பாதிப்பு !

கரோனா தொற்று மீண்டும் இந்தியாவில் அசுர வேகம் எடுத்து வருகிறது.நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நடிகர் சோனு சூட் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், வணக்கம் நண்பர்களே, எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இவர் தமிழில் அருந்ததி,ஒஸ்தி மற்றும் தேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.மேலும் கரோனா காலத்தில் மக்களுக்கு பல பொதுநல தொண்டுகளை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.