முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூபாய் 500 அபராதம் – ரயில்வே !

கரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை 11,99,37,641 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கரோனா காலத்தில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூகஇடைவேளை கடைபிடிப்பது முக்கியம் என்று அரசு அறிவுறுத்துகிறது.

தற்போது முக கவசம் அணியாமல் நடமாடினால் ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எனவே ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் முக கவசம் தவறாமல் அணிந்து செல்ல வேண்டும் என்று ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.