தொடர் மழை: செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயம்!!!

வட கிழக்கு பருவ மழை மற்றும் ‘நிவர்’ புயலுக்கு நெல், மணிலா, வாழை மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதேபோல் சின்ன வெங்காயமும் அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர்.

மதுரை மற்றும் புறநகர் சுற்றுவட்டார பகுதிகளில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்து வரும் தொடர் கனமழையால் சின்ன வெங்காயம் செடியிலேயே அழுகி வீணாகி போனதால் செடிகளை பிடிங்கி சாலையில் கொட்டி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விதை, உரம், பராமரிப்பு செலவுகள் என ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் வரையில் செலவு செய்த நிலையில், தற்போது அதீத மழையால் செடியிலேயே அழுகி போனதால் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.