இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை!

டெல்லியில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 பைசா உயர்ந்து ரூ. 83.13க்கும், டீசல் விலை 25 பைசா உயர்ந்து ரூ.73.07க்கு விற்பனையாகிறது. 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பின் பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

நவம்பர் 20ஆம் தேதிக்கு பின் பெட்ரோல் விலை 13 முறை உயர்த்தப்படுள்ளது. கடந்த 15 நாள்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.07 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 2.86 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.