kollywood updates : நடிகர் சிவகார்த்திகேயனின் 10 ஆண்டுகால திரைப்பயணம் !

HBD sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று !
HBD sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று !

kollywood updates : நடிகர் சிவகார்த்திகேயன் 17 பிப்ரவரி 1985 ஆண்டு பிறந்துள்ளார். அவர் தனது வாழ்க்கையை தொலைக்காட்சியில் ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ஸ்டார் விஜய்யில் தொடங்கினர்.

இவருடைய பேச்சுக்காக பல ரசிகர் கூட்டம் இவரை விரும்ப ஆரம்பித்தனர்.தான் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலிக்க ஆரம்பித்து 10 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக தன்னை முதலில் அறிமுகப்படுத்திய இயக்குனர் முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது முதல் படமான மெரினா படத்தில் நடித்தார்.அதன் பின்பு கேடி பில்லா கில்லாடி ரங்கா ,எதிர்நீச்சல்,மனம் கொத்தி பறவை போன்ற படங்களில் சிறப்பாக நடித்தார்.

இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள்.நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம்.இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த இடம் நான் நினைத்துப் பார்த்திராத நிஜம்.

இந்த தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டிராஜுக்கும், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் உடன் நின்று பயணித்த இயக்குநர்களுக்கும் தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த என் சக கலைஞர்களுக்கும், என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும், நண்பர்களுக்கும், அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : health benefits of soaked almonds : ஊறவைத்த பாதாமில் உள்ள நன்மைகள் !