வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழா

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.

இக்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்குவிழா சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி, அரசின் நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.

விழாவையொட்டி 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் 25-ந்தேதி தொடங்கியது. 8-வது கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்ததையடுத்து வைத்தீஸ்வரன்கோவில்  கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.

பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் இன்று காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வைத்தீஸ்வரன்கோவில் 4 ரத வீதிகளில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் லலிதா 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மக்கள் குடமுழுக்கை பார்க்கும் வகையில் யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.