இன்று வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழா !

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெறுகிறது.செவ்வாய் கடவுளாக வண்ணங்கப்படும் அங்காரகன் இத்தலத்தில் பிரசித்திபெற்றவர்.

விழாவையொட்டி 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் 25ஆம் தேதி தொடங்கியது.கரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருவதை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு அதிகாலை 4 மணி முதல் இரவு10 மணி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.23 ஆண்டுகளுக்கு பின்பு இந்த குடமுழுக்கு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.