தோனியின் பெற்றோர் தொற்றிலிருந்து மீண்டனர்..!

எம்.எஸ். தோனியின் தாயார் தேவகி தேவி, தந்தை பான் சிங் ஆகியோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து ராஞ்சி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

ராஞ்சி தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு கோவிட் 19 சிகிச்சையில் இருந்து வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா நெகெட்டிவ் என்று வந்தது, மேலும் இருவருக்கும் எந்த ஒரு உடல் உபாதைகளும் இல்லை.

இந்நிலையில் இருவரையும் தனியார் மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்ய சக்கர நாற்காலியில் தோனியின் தந்தை வெளியே வந்தார், தேவகி தேவியும் அவருடன் வீடு திரும்பினார்.