பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடம் – மருத்துவமனை நிர்வாகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல் நிலை கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மோசமடைந்தது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.சரண் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.