தமிழகத்தில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் ரூத்ர தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5லட்சத்து 63ஆயிரத்து 691ஆக அதிகரித்துள்ளது.

66 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆயிரத்து 076ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5லட்சத்து 08ஆயிரத்து 210பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 46ஆயிரத்து 405 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.