மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் !

வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த மாநாடு படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு ‘மாநாடு’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிம்பு கையில் துப்பாக்கியுடன் அரசியல் மாநாட்டுக்குள் இருக்க, வெடிகுண்டு வெடிக்கிறது.

யுவன் சங்கர்ராஜாவின் இசையுடன் வெளியிடப்பட்டுள்ள மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.யுவன் மற்றும் சிம்பு சேரும் இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை அளிக்கிறது.