தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் காலமானார் !

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், த.மா.க.வின் துணைத் தலைவருமான பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

இவர் கடந்த நவம்பர் மாதம் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு வயது 71 . பின்னர், கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டதால், தீவிர சிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் , சிகிச்சைப் பலனின்றி இன்று பிற்பகல் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.