பூண்டின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் !

நம் உணவுகளில் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.இதில் இருக்கும் ஆன்டி பையாட்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நம் ஆரோகியத்திற்கு பல நன்மைகளை கொடுக்கிறது.

பூண்டு, இதய நோய்களை தடுப்பது, நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பும் நபராக இருந்தால், நிச்சயம் பூண்டினை உட்கொள்ள வேண்டும்.காலை வெறும் வயிற்றில் பூண்டு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

கொலஸ்ட்ரால் உங்களுக்கு அதிகம் இருக்குமானால் உணவில் அதிகம் பூண்டு சேர்த்து சாப்பிடவேண்டும். தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்கி, வீரியம் அதிகரிக்கச் செய்யும்.இதய அடைப்பை நீக்கும், நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும்.வயிற்றில் புழுக்கள் இருந்தால், அதனை வெளியேற்ற, தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறிவிடும்.