மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் இலவச இன்டர்நெட் இணைப்பு -கேரளா !

கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் உள்பட 5 மாநிலங்களில் இவ்வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது.

கேரள சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறியது,படிக்கும் மாணவர்கள் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மலிவு விலையில் லேப்டாப்புகள் வழங்கப்படும் என்றும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் இலவசமாக இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்படும்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீத மானியத்திலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 25 சதவீத மானியத்திலும் இவை வழங்கப்படும். மீத தொகையைத் தவணை முறைகளில் அடைக்கலாம்.முதியோர் ஓய்வூதியம் உள்பட அனைத்து நல ஓய்வூதியங்களும் ரூபாய் 1600 ஆக உயர்த்தப்படும்.