பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர் !

கனடா நாட்டில் பெருமளவில் இந்திய சமூகத்தினர் வாழ்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சீக்கியர்கள் மற்றும் தமிழ் சமூகத்தினர். அங்கு வாழும் தமிழ் சமூகத்தினர் இந்தியா மட்டுமின்றி இலங்கை வம்சாவளி தமிழர்களாகவும் உள்ளனர்.

அங்கு நடக்கும் பன்முக கலாசாரத்தை போற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. வழக்கமாக அந்தந்த கலாசார நிகழ்வுகளின்போது அந்த சமூகத்தினரின் பாரம்பரிய ஆடையில் தோன்றி நிகழ்ச்சியை கொண்டாடுவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

கனடாவில் ஜனவரி மாதம், தமிழ் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.அங்கு பேசிய அவர் , கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள துடிப்பான தமிழ் சமூகத்தின் வரலாறு, தாங்கும் சக்தி மற்றும் வலிமை பற்றி மேலும் அறிய அனைத்து கனடியர்களையும் நான் ஊக்குவிக்கிறேன். எங்கள் குடும்பத்தின் சார்பாக, சோபியும் நானும் தைப்பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.