தமிழர் பாரம்பரிய பண்டிகையான மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் !

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.மக்களின் வாழ்வில் ஒன்றிய மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், இந்த நாளாகக் கொண்டாடுகின்றனர்.

இன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். கழுத்துக்குத் மாலை சூடி , திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள்.மேலும் உழவன் வாழ்வில் சரிபாதி வகிக்கும் மாடுகளுக்கு படையல் போட்டு தீபம் காட்டி வணங்குவார்கள்.பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.