கோவிஷீல்டு’ தடுப்பூசி போடும் திட்டத்தை மோடி தொடங்கிவைத்தார்..!

கரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள், பல்வேறு நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்ஸின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன்பின், தடுப்பூசி போடும் பணி 2 கட்டங்களாக ஜனவரி 16-ம்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்குதொடங்கி வைத்தார். பின்னர், நாட்டு மக்களிடையே காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.