தாலி பலம் அருளும் கௌரி விரதம்!

மக்களால் பலவகையான விரதங்கள் கொண்டாடப்படுகிறது.இதில் ஒரு பெண்ணிற்கு முக்கியமானதாக குறிக்கப்படுவது கேதார கெளரி விரதம்.இதில் சிறப்பம்சம் என்னவென்றால் தீர்க்க சுமங்கலி பவ என்று பெண்களை ஆசிர்வாதம் செய்வார்கள் அதற்காக இருக்கும் விரதம் தன் கௌரி விரதம்.

மேலும் இந்த விரதம் தாலி பாக்கியத்தைத் தந்தருளும்,கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித் தரும் விரதம், குடும்பத்தில் ஒற்றுமையை தரும் விரதம் கௌரி விரதம்.இதற்கு பெரும் மகிமையுள்ளது.இந்த விரதத்தின் முக்கியமான ஒன்றாக இருப்பது நோன்பு கயிறு.சிவனாரையும் சக்தியையும் மனதாரப் பிரார்த்தித்து, நோன்புச்சரடு கட்டிக்கொள்வார்கள் பெண்கள்.

கேதார கௌரி விரதத்தை, சுமங்கலிகள் கடைப்பிடிக்க வேண்டும். அந்த காலா பெண்கள் ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் மண்ணால் லிங்கம் அமைத்து பூஜித்து வந்தார்கள் அந்தக்காலத்தில்.

கேதார கௌரி விரதத்தை, முறையாகவும் செய்தால், பிரிந்த தம்பதி ஒன்றுசேருவார்கள். தாம்பத்யம் சிறந்து விளங்கும். மாங்கல்ய பலம் பெருகும். தீர்க்க சுமங்கலியாக வாழலாம். கணவரின் ஆயுள் நீடிக்கும்.நம்மால் முடிந்தவற்றைக் கொண்டும் நைவேத்தியம் செய்யலாம்.