உலக அழகு தினம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று கொண்டாடப்படுகிறது, இது அழகை விரும்பும் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட நாள்.
சர்வதேச அழகியல் மற்றும் அழகுசாதனக் குழு (CIDESCO) வின் முயற்சியால் செப்டம்பர் 9 ஆம் நாள் 1995 ஆம் ஆண்டு முதல் உலக அழகு தினமாக மாறியது.CIDESCO பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் 1946 இல் நிறுவப்பட்டது, தற்போதைய தலைமை சுவிற்சர்லாந்து இல் அமைந்துள்ளது. சிடெஸ்கோ டிப்ளமோ உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
இதன் குறிக்கோள் என்ன வென்றால் அழகு மற்றும் ஸ்பா சிகிச்சை உயரிய தரங்களை நிறுவுதல் மற்றும் உலகெங்கிலும் அழகியலை ஊக்குவித்தல் என்பதாகும்.ஆரோக்கியமான மற்றும் அழகான மக்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்திழுக்கிறார்கள்.இதற்காக விலை உயர்ந்த அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தவோ அல்லது விலையுயர்ந்த மற்றும் பிராண்ட் ஆடைகளை வாங்கவோ தேவையில்லை.
இந்த உலக அழகு தினத்தில் அவர்கள் வலியுறுத்துவது,முக்கியமானது நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்.மேலும் சிறிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உடல் கட்டுக்குள் வந்துவிடும்.மேலும் ஆரோக்கியமான உணவுகளை உண்பது.



