கொரோனா பரவல் காரணமாக சென்னையில் 9 இடங்களில் கடைகள் அடைப்பு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் வெகுவாக பாதித்தது.இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அறிவித்தது.இந்த ஊரடங்கு காலத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறையத்தொடங்கியது.

தற்போது தொற்று எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.சென்னையில் இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணி வரை 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட மாநகராட்சி தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணிவரை ஊரடங்கு தளர்வுகளின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்கள் செயல்பட அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தடைவிதிக்கலாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ரங்கநாதன் தெரு வடக்கு உஸ்மான் சாலைமுதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும்.புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாரில் வணிக வளாகம், ராயபுரத்தில் கல்மண்டபம் பகுதி, அமைந்தகரை சந்தை ஆகிய பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருக்கும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.