மணிவண்ணன் என்ற மாமேதை பிறந்த தினம் !

மணிவண்ணன் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஜூலை 31 ,1953 பிறந்தார்.தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் என இரண்டு துறைகளிலும் தன் திறமை கொண்டு சாதித்தவர்.இவர் 00 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

நிழல்கள் படத்தின் மூலம் பாரதிராஜாவால் கதை – வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தப்பட்டவர்.இவரது இயக்கிய முதல் படம் மோகன், சுஹாசினி, ராதா நடிப்பில் வெளியான கோபுரங்கள் செய்வதில்லை .

மணிவண்ணன் மற்றும் சத்யராஜ் இருவரும் இணைந்து பல மறக்க முடியாத படங்களைக் கொடுத்துள்ளனர். இதில் இன்றளவும் அரசியல் பற்றி பேசும் அமைதிப்படை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்த படமாக இருந்தது. இது ஒரு புது வகை அரசியல் நையாண்டி படமாக கொண்டாடப்பட்டது.

இயக்கம் மட்டும் இல்லாமல் படங்கள் குணசித்ர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு உள்ளிட்ட கருத்துகளைப் பின்பற்றிவந்த மணிவண்ணன் அவற்றைத் தன் படங்கள் வாயிலாக வலியுறுத்தினார்.மணிவண்ணன் 15 ஜூன் 2013 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.ஆனால் இவரது படங்கள் மற்றும் இவரது நடிப்பு ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.