சீனா எரிவாயு வெடிப்பு விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் !

சீனா ஹூபேய் மாகாணத்தில் அமைந்துள்ள ஷியான் நகரில் குடியிருப்பு பகுதியில் எரிவாயு பைப் காலை 6:30 மணியளவில் ஒரு எரிவாயு குழாய் வெடித்தது.

இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 138 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.மேலும் காயம் அடைந்தர்வர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.