இன்று முதல் மேலும் சில தளர்வுகளுடன் தொடரும் தமிழக ஊரடங்கு !

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்து வருவதை தடுக்க மே 10 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.மேலும் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.தற்போது தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்கான மேலும் சில தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.

தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி காலை 6 முதல் மாலை 5 வரை.கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் கட்டுமான நிறுவன அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் .கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பார்சல் விற்பனைக்கு அனுமதி.அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும்.