இந்தியாவில் தடுப்பூசி பயன்பாடு நிலவரம் !

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது.இதனை தடுக்க ஊரடங்கு அந்தந்த மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளும் தீவிரமாக தடுப்பூசி போடும் பணிகளை நடத்திவருகிறது.இந்தியாவில் இதுவரை 25.31 கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் 20 கோடி பேருக்குமுதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 34 லட்சத்து 84,239 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.மகாராஷ்டிராவில் இதுவரை 2 கோடி பேருக்கு முதல் தவணையும், 51 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அதிக தடுப்பூசிகளை பயன்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் குஜராத், ராஜஸ்தான், மேற்குவங்கம், கர்நாடகா ஆகியவை அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.