டவ்தே புயலால் மும்பை அருகே கப்பல் மூழ்கியதில் 26 பேர் உயிரிழப்பு !

டவ்தே புயல் கடந்த திங்கட் கிழமை நள்ளிரவு குஜராத்தில் கரையை கடந்தது.இந்த புயல் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 

மும்பையின் தென்மேற்கு பகுதியில் இருந்து 70 கி.மீ. தொலைவில் ஹீரா எண்ணெய் கிணறு உள்ளது.கச்சா எண்ணெய் எடுக்கும் பணிக்காக அங்கு பி-305 என்ற எண்ணெய் துரப்பண கப்பல் நிலை நிறுத்தப்பட்டது, அதில் 261 ஊழியர்கள் இருந்தனர்.

புயல் காரணமாக கப்பல் கடலில் அடித்து செல்லப்பட்டது.தகவல் கிடைத்தவுடன் கடற்படையினர் கப்பலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

அவர்களை மீட்கும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் 186 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர்.26 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் 61 பேர் மாயமாகினர்.எனவே அவர்களை கடற்படையினர் தேடி வருகின்றனர்.