கர்நாடகா அரசு அறிவித்த கரோனா நிவாரணம் !

இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது.தொற்று பரவாமல் இருக்க மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

கரோனா தொற்று அதிகம் இருக்கும் மாநிலமாக கர்நாடகா உள்ளது.கர்நாடக மாநிலத்தில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,250 மதிப்பிலான நிவாரணத்தை அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பூ, காய் மற்றும் பழ விவசாயிகள் என 95 ஆயிரம் பேருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்படும். ஆட்டோ, டாக்சி மற்றும் மேக்சிகேப் ஓட்டுநர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

முடி திருத்துவோர்,டெய்லர்கள், மெக்கானிக்குகள், செருப்பு தொழிலாளிகள் மற்றும் குப்பை சேகரித்து வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உதவி வழங்கப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.