தமிழகத்தில் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.காரோணவிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே வழி.
தமிழகத்தில் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.இந்த நிலையில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட, சுகாதாரத்துறை சார்பில் ரூ.46 கோடி செலுத்தி, அதில் 9 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இன்று முதலமைச்சர் ஸ்டாலின் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் தொடங்கி வைக்க உள்ளார்.



