மூத்த இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார் !

கரோனா தொற்று வந்த பிறகு தினம்தோறும் திரைபிரபலன்களின் இறப்பு செய்தி வந்த வண்ணமே உள்ளது.இந்த வருடம் கரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

தற்போது இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.தமிழில் கல்யாண ராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா மற்றும் மகராசன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன்.

இவருக்கு வயது 90.இவருடைய மகன் இயக்குநர் ஜி.என்.ஆர் குமாரவேலன்.இவர் யுவன் யுவதி, ஹரிதாஸ் மற்றும் நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களை இயக்கியவர்.ரங்கராஜனின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.