14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார் !

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு மிக தீவிரமாக கண்காணிக்கபடுகிறது.மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட்டுவருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

அந்த 14 பொருட்கள் விபரம் :
சர்க்கரை- 500 கிராம்
கோதுமை – 1 கிலோ
உப்பு- 1 கிலோ
ரவை- 1 கிலோ
உளுத்தம் பருப்பு- 500 கிராம்
புளி- 250 கிராம்
கடலை பருப்பு- 250 கிராம்
டீ தூள் -200கிராம்
கடுகு- 100 கிராம்
சீரகம்- 100 கிராம்
மஞ்சள் தூள்- 100 கிராம்
மிளகாய் தூள்- 100 கிராம்
குளியல் சோப்பு 25 கிராம் – 1
துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1 ஆகியவை இந்த 14 மளிகை பொருட்களில் அடங்கும்.

இந்த 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.