காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாவுக்கு இடையே எந்த வேறுபாடும் கிடையாது..!

காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாவுக்கு இடையே எந்த வேறுபாடும் கிடையாது. கட்சிதான் வெவ்வேறு. ஆனால் வெளியுறவு, பொருளாதாரம், பாதுகாப்பு என எல்லாவற்றிலும் கொள்கை ஒன்று தான். இந்தியாவை ஆளக்கூடிய பா.ஜனதா, நாம்தமிழர் கட்சியை போல் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயாரா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கலவரத்தில் அதிக வழக்குகள் போடப்பட்டது நாம் தமிழர் கட்சியினர் மீதுதான். எனவே அதனை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.